திம்புலாகல முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தலைமையக விஷேட விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் அரலகங்வில பகுதியில் தேர்தல் அலுவலகம் ஒன்றைத் தாக்கி இருவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக அரலகங்வில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சந்தேகநபரை பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.