பொது இடங்களில் குப்பைகளை கொட்டும் நபர்களை கைது செய்யும்படி பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பலர் பொது இடங்களில் முறையற்ற விதத்தில் குப்பைகளை கொட்டுவது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதன் காரணமாகவே அமைச்சர் இந்த பணிப்புரையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.