பொது ஜன முன்னணியின் மற்றுமொரு வேட்பாளர் கைது…

வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபைக்கு பொது ஜன முன்னணி சார்பில் போட்டியிடும் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர் ஒருவர் இன்று(10) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வவுனியா செட்டிக்குளம் மீடியாபாம் பகுதியில் அரிய வகை மரங்களை வெட்டியமையினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 21 மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.