(FASTNEWS | COLOMBO) – பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முன்னால் அரச ஊழியர்கள் கூட்டணியினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச ஊழியர்களது சீருடை தொடர்பிலான சுற்றுநிருபம் இல.13/2019 அமைய அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரசியல் நோக்கங்களுக்கான திருத்தப்பட்டு 2019.06.26 அன்று வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் இல 13/2019/(1) இற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.