தேசிய பல சேனாவின் உறுப்பினரும், மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினருமான வட்டரக விஜித தேரரினை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்குள் மறைத்து வைத்துள்ளதாகக் கூறி,
அமைச்சினுள் அத்து மீறி நுழைந்து அட்டகாசம் புரிந்த பொது பல சேன அமைப்பின் உறுப்பினர்கள் அறுவருக்கு எதிரான குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், குற்றப்பத்திரத்தை ஜூலை 19ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான், பியந்த லியனே இன்று (4), பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.