மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து அரசாங்கம் கொள்கை அளவில் தீர்மானம் எடுத்துள்ள நிலையில், இன்று(01) மே தின பேரணி செல்வதாக எவரும் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை என கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பேரணி செல்லவும் மே தினத்தை அனுஷ்டிக்கவும் தனியான தினமொன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று எவரேனும் பேரணி செல்வதன் ஊடாக பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்துவார்களாயின், அவ்வாறான சந்தர்ப்பங்களில் அப்பேரணிகளை கலைக்க பொலிஸார் கையாளும் வழமையான நடவடிக்கைகள் கையாளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
####