பொது வெளியில் முகக்கவசம் அணிவது அவசியம் 

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முகக்கவசம் அணிவது தொடர்பான தமது ஆலோசனையை மாற்றுவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வைரஸ் பரவுவதை தடுக்க பொது வெளியில் முகக்கவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

முன்னதாக, ஆரோக்கியமானவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என உலக சுகதார ஸ்தாபனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், முகக்கவசம் தொடர்பான தங்களின் ஆலோசனையில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளது.