பொன்சேகாவினால் இராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் செத்து மடிந்தனர்.. – மைத்திரி

(FASTGOSSIP |COLOMBO) – நாட்டின் பாதுகாப்பு பலவீனமாக உள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த கருத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான தொனியில் மறுத்துள்ளார்.

இன்னும் 50% ஆன பயங்கரவாதம் நாட்டில் வலம் வருவதாக பொன்சேகா தெரிவித்திருந்த கருத்தினை எதிர்த்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்துத் தெரிவிக்கையில்;

பொன்சேகா இராணுவத் தளபதியாக இருக்கும் காலத்தில் ஒரு இடத்தில் ஒரு நாளினுள் இராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் செத்து மடிந்ததாக ஜனாதிபதி நினைவு கூறியிருந்தார்.

எவ்வித உண்மைப்பாடும் இல்லாது இவ்வாறான கருத்துக்களை பொதுமக்களிடம் தெரிவிப்பது வெறும் அச்சத்தினை ஏற்படுத்தும் காரணம் எனவும் தெரிவித்திருந்தார்.