பொய்களுக்கு விளக்கம் கூறுகிறார் மஹிந்த

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை ஏன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே வைத்தீர்களென கேள்வியெழுப்புகின்றனர்.

2015 ஆம் ஆண்டு நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பதால் நான் முன்கூட்டியே தேர்தலை வைத்து, அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமது இயலாமையை மூடிமறைத்துக்கொள்ளவே அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் தனது அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களாக இருந்துள்ளனர்.

எனவே, அங்கு உண்மைகளை மறைக்கக்கூடிய வாய்ப்பு இல்லை. யாராவது அமைச்சரவையில் இருந்துகொண்டு முக்கிய அமைச்சையும் தன்னகம் வைத்துக்கொண்டு நாட்டு நடப்பபை தெரியாமால் இருப்பாரானால் அவர் எவ்வாறு நாட்டையாழுவாளர்.

நான் மட்டும் முன்கூட்டியே தேர்தலை நடத்தவில்லை. 1982ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தன, 1999ஆம் ஆண்டு சந்திரிக்கா குமாரணதுங்க என பலர் உள்ளனர்.

எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடிகளுக்கு பயந்து நான்முன்கூட்டியே தேர்தலை நடத்தியமை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தன்து அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.