பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு 03 – 05 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை…

(FASTGOSSIP| COLOMBO) – சமூக ஊடகங்களின் வழியாக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு 03 தொடக்கம் 05 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படவும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இவ்வாறான போலிப் பிரச்சாரங்களினால் மக்கள் பீதியடைவதுடன் பாதுகாப்புத் தரப்பினர் பிழையாக வழிநடத்தப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே போலியான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக அவசர காலச் சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளி என நிரூபிக்கப்படும் நபர்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மத்திய நிலையம் மேலும் அறிவித்துள்ளது.