பொரலஸ்கமுவ பிரதேச வாகன விபத்து – வைத்திய அதிகாரிக்கு விளக்கமறியல்…

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதக​ர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்திய அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, குறித்த வைத்திய அதிகாரியை இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி, நேற்று(09) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.