(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொரள்ளை லெஸ்லி ரணகள மாவத்தையின் குறுக்கு வீதிகள் பொலிசாரினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் நால்வர் இனங்காணப்பட்ட நிலையிலேயே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்பிலான நபர்கள் சிலர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த போதிலும் அவர்கள் எவருக்கும் தொற்று உறுதியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.