பொரித்த நெத்தலியின் வயிற்றுக்குள், பக்கற் செய்யப்பட்ட ஹெரோயின் மீட்பு

பொரித்த நெத்தலியின் வயிற்றுக்குள், பக்கற் செய்யப்பட்ட ஹெரோய்னை வைத்து, கைதியொருவருக்கு கொண்டு சென்ற 54 வயதான பெண்ணை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிக்கு உணவு கொண்டு செல்வதை போல, சிறைச்சாலைக்குள் அந்த ஹெரோயினை அப்பெண் கொண்டு செல்வதற்கு முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரித்த நெத்தலியின் வயிறுக்குள் இருந்தவற்றை அகற்றிவிட்டு, அதற்குள் சின்னஞ்சிறிய பொதிகளை மறைத்து வைத்து, சாப்பாடு கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைத்தே 2 கிராம் மற்றும் 300 மில்லிகிராமை கொண்டு செல்வதற்கு முயன்றுள்ளார்.

84 பக்கற்றுகள் இருந்ததாகவும் அவை ஒவ்வொன்றும் 5 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.