பொரும்போக நெற்கொள்வனவு ஆரம்பம்

அம்பாறை, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பொரும்போக நெற்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெற் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் எம்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசி  38 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 41 ரூபாவுக்கும், கீரி சம்பா 50 ருபாவுக்கும் கொள்வனவு செய்யப்படுவதாக நெற் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கூறினார்.

அடுத்த வாரத்திலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நெற் கொள்வனவு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விவசாயி ஒருவரிடமிருந்து அதிகபட்சமாக 2000 கிலோகிராம் நெல்லைக் கொள்வனவு செய்யவுள்ளதாக நெற் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் எம்.பி.திசாநாயக்க மேலும் சுட்டிக்காட்டினார்