ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக அரசு 3.2 பில்லியன் அந்நிய செலாவணியை நிதிச் சந்தைக்கு விடுவித்துள்ளது.
அரசாங்கம் எதிர்பார்த்த கட்டுப்பாட்டை ஏற்படுத்த முடியாத நிலையில் நிலைமை மோசமாகி கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாட்டினது உண்மையான பொருளாதார நிலைமை வீழ்ச்சி மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான 100 பக்கங்கள் அடங்கிய ஆய்வறிக்கையை இன்று வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மங்களாராமவிகாரையில் நேற்று(08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர மேற்கண்டவாறு தெரிவித்தார்.