பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நியமிக்கப்பட்ட பொருளாதார முகாமைத்துவ குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று(27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பொருளாதார முகாமைத்துவ குழுவால் கடந்த காலத்தில் நாட்டிற்கு பயனுள்ள எந்த செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என தெரிவித்து ஜனாதிபதியால் அந்த குழுவை இரத்துச் செய்ய இரண்டு அமைச்சரவை பத்திரங்கள் இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இந்த குழுவை தொடர்ந்து பராமரித்துச் செல்ல வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்திருந்த போதும் , ஜனாதிபதி பொருளாதார முகாமைத்துவ குழுவை இரத்துச் செய்வதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.