பொறிக்குள் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புஸ்ஸல்லாவை பகுதியில் அமைந்துள்ள தோட்டமொன்றில் இரண்டு சிறுத்தைகள் பொறிக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சிக்கிய சிறுத்தைகளில் ஒன்று உயிரிழந்துள்ளதுடன், மற்றைய சிறுத்தை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்துள்ள சிறித்தையை பாதுகாப்பாக மீட்பதற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.