பொலன்னறுவை – மஹியங்கனை பிரதான வீதியை மறித்து, திம்புலாகல பிரதேச விவசாயிகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்கத்தால் வழங்கப்படும் உரமானியம் தமக்கு உரிய வகையில் இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்து இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 700 குடும்பங்களுக்கு இந்த உரமானியம் வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.