பொலிதீனுக்கு பதிலாக சந்தையில் கடதாசிப் பைகள்…

சந்தைகள் மற்றும் பிரதான ஆடை உற்பத்தி நிலையங்களின் பொருட்கள் விற்பனையின் போது, பயன்படுத்தக்கூடிய பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மாற்றுப் பைகளைப் பயன்படுத்துவதுத் தொடர்பில் வர்த்தகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

விசேடமாக கடதாசிகளாலான பைகளைப் பயன்படுத்துவது குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளதுடன், இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் ஜே. எம்.வி. இந்தரரத்ன தெரிவித்தாரர்.

தேசிய அருங்கலைகள் சபையுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.