(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அனைத்து வேட்பாளர்களும் தமத தேர்தல் நடவடிக்கையின் போது, பொலித்தீன், சுவரொட்டிகளின்றி சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், தமது பிரச்சாரங்களை முன்னெடுக்குமாறு, சகல வேட்பாளர்களிடமும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் இலங்கையின் ஜனாதிபதிக்கான தேர்தல் பிரச்சாரங்களில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பொலுத்தீன் மற்றும் சுவரொட்டிகளை தவிர்ப்பதில் கவனம் செலுத்துதல் சாலச்சிறந்தது. நாம் அனைவரும் எமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய தருணம் இது.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) July 31, 2019