பொலிதீன் தடை எனக் கூறியதற்கு எல்லாம் தடையாகாது..

பொலிதீன் இனால் உற்பத்தியாகும் உணவு பொதியிடும் தாள், (சிலிசிலி) சிலிகான் பைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட பாலியெஸ்டரின் (expanded polystyrene) உற்பத்திகளால் ஆன உணவுப் பெட்டிகளது பாவனைத் தடை இன்னும் ஒருவாரத்தில் அமுலுக்கு வருகின்றது.

இதற்கு முன்னரும் சில பொலிதீன் உற்பத்திகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அவை மைக்ரோன் உற்பத்திகளாக இருந்தது.

எவ்வாறாயினும், தற்போதைய தடையானது பலவகையான பொலிதீன் உற்பத்திகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கழிவு மேலாண்மை பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஜெனரல் உபாலி இந்திரரத்ன தெரிவிக்கையில்;

“லஞ்ச் சீட்களில் நாம் மெல்லியவை தடித்தவை என வகைப்படுத்துவதில்லை. பொலியெதிலின் உற்பத்திகளிலான அனைத்து லஞ்ச் சீட்’களும் தடையாகிறது. அவ்வாறிருக்க நாம் அவற்றிலான சில்லறை பைகளை தடை செய்யவில்லை. HDP உற்பத்திகளான சிலிசிலி பைகள், சில்லறைப் பைகள் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது. ldpe product தடை ஆகாது. அதாவது, ஆடையகங்களில் பொருட்கள் வாங்கும் போது வழங்கப்படும் பைகளுக்கு தடையில்லை. இன்னும், குப்பைகள் போடும் கறுப்பு பைகளும் தடையாகாது..”

“..குறித்த தடையானது செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருவதோடு, உற்பத்திகள், விநியோகங்கள் மற்றும் பாவனைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படும்..” எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

(rizmira)