பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எரியூட்டுவதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை தடை விதித்துள்ளது.
குறித்த பொருட்கள் எரியூட்டப்படும்போது வெளியேறும் புகை மற்றும் நச்சு வாயுவினால் வளி மாசடைவதோடு, மனிதர்களுக்கு புற்றுநோய், பக்கவாதம் மற்றும் சுவாச நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக குறித்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
வீடுகளிலோ அல்லது பொது இடங்களிலோ பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எரியூட்டியமை உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சிறைத்தண்டனை அல்லது 10 இலட்சம் வரை அபராதம் விதிக்கப்படுமெனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது.
உணவுப் பொதியிடல் செய்யும் பொலித்தீன் மற்றும் பெட்டி உள்ளிட்ட பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கான தடை நேற்று(01) முதல் கட்டாய அமுலுக்கு வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்திருந்தது.
அதுமட்டுமல்லாது பொலித்தீன் விற்பனையை தடுக்க விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் மர்வின் தெரிவித்துள்ளார்.
#r