பொலிவான சருமத்திற்கு பால் மட்டும் பயன்படுத்தினாலே போதும்…

நாம் அன்றாடம் சாப்பிடும் பொருட்களில் ஒன்று பால். பால் குடித்தால் அதிலிருந்து ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும்.

பால் நம்முடைய உடல் நலனில் மட்டுமல்ல நம்முடைய அழகுக்கும் பயன்படுகிறது. பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அமிலங்கள் சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. பாலுடன் வேறு எந்தப் பொருளையும் கலக்காமல் வெறும் பாலினால் உங்கள் சருமம் மற்றும் தலைமுடிக்கு என்னென்ன நன்மைகள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

நிற வேறுபாடு :
வெயிலில் அதிகம் அலைபவர்களுக்கு முகத்திலேயே ஆங்காங்கே நிற வேறுபாடுகள் தோன்றிடும். அதுவும் திட்டு திட்டாக தோன்றும். ]இதனை போக்க வெறும் பாலை எடுத்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடங்களில் காய்ந்ததும் கழுவிடலாம். இப்படிச் செய்வதனால் உங்கள் முகம் பளீச்சென்று மாறும். இரண்டு டேபிள் ஸ்பூன் பால், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் மாஸ்க்காக போடலாம். அது நன்றாக காய்ந்ததும் கழுவிடலாம்.

ஸ்க்ரப் :
முகத்தில் இருக்கும் இறந்த செல்களை உடனே நீக்கிட வேண்டும் இல்லையெனில். அவை சருமத்துவாரங்களை அடைத்துக்கொண்டு சருமத்தில் பருக்கள் தோன்ற காரணமாய் அமைந்திடும். இதற்கு பாலில் சிறிதளவு உப்பு கலந்து முகத்தில் தேய்க்கலாம். ஓட்ஸுடன் பால் சேர்த்து முகத்தில் ஸ்க்ரப்பாக தேய்க்கலாம்.இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் எல்லாம் நீங்கிடும்.

தழும்புகள் :
பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் தோன்றினால் முகத்தில் ஏற்படும் தழும்புகளை போக்கவும் பாலை பயன்படுத்தலாம். பாலில் இருக்கும் விட்டமின்ஸ்கள் முகத்தில் தோன்றும் தழும்பினை போக்கும் ஆற்றல் கொண்டது. பசும்பாலை கொதிக்க வைக்காமல் அப்படியே முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவிடலாம். அப்படியில்லை எனில் உருளைக்கிழங்கு நன்றாக அரைத்து அந்த பேஸ்ட்டுடன் பால் சேர்த்து முகத்தில் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள் இருபது நிமிடங்களில் நன்றாக காய்ந்ததும் கழுவிடலாம்.

சுருக்கங்கள் :
சருமத்தில் தோன்றும் சுருக்கங்கள் தான் பலருக்கும் பயமுறுத்தும் விஷயமாக இருக்கிறது. அதனை வராமல் தடுக்க வேண்டும் என்றால் நீங்கள் தினமும் பால் பயன்படுத்த வேண்டும். அதோடு அரைத்துண்டு வாழைப்பழத்துடன் பால் சேர்த்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அதனை முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்களில் நன்றாக காய்ந்தவுடன் கழுவிடலாம்.