பொலிவியாவில் நடைபெறவுள்ள இசைவிழாக்கான முன்னேற்பாட்டின்போது, சமையல் சமையல் எரிவாயு வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2002-ம் ஆண்டு முதல் இசை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து இசைக் கலைஞர்கள் திரளாக பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான இசை திருவிழா அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடுகளை அரசு சிறப்பாக செய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம்(10) சாலையோர கடை ஒன்றில் சமையல் செய்து கொண்டிருந்த சமையல் எரிவாயுவில் இருந்து எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டு எரிவாயு வெடித்து சிதறியதில் அப்பகுதியில் இருந்த மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன் மேலும், 40-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக வைத்தியர்கள் கூறுகையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.