பொலிஸாரின் சுற்றிவளைப்பில் யாழில் 22 பேர் கைது…

கடந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு, வீடுகள் மீதான தாக்குதல், மனித அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் ஆகிய பிரதேசங்களில் நேற்று(06) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறைந்த வயதுடையவர்கள் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் இயங்குகின்ற குழுக்களுடன் இணைந்து கொள்வதாகவும், அவ்வாறான குழுக்களை அடக்குவதற்காக கடந்த 01ம் திகதி முதல் விஷேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.