பொலிஸ்மா அதிபர் பூசித ஜயசுந்தர அவரது பாதணிகளை பாதுகாவலரிடம் கொடுத்து சுத்தம் செய்வது குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
சகோதர மொழி ஊடகமொன்றினால் பிரசித்தமாக்கப்பட்ட குறித்த வீடியோ இற்கு அமைய பொலிஸ் அதிகாரி (பொலிஸ் பாதுகாவலர்) பொலிஸ்மா அதிபரின் பாதணிகளை அவரது கைக்குட்டையினால் துடைக்கின்றமையினை காட்டுகின்றது.
பாதை ஓரத்தில் பிரசித்தமாக நடந்தேறிய குறித்த சம்பவமானது, குறித்த வீடியோவில் தெளிவாக காணக்கூடியதாக உள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் குறித்த வீடியோவுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுகின்றமையும் காணக்கூடியதாக உள்ளது.
(rizmira)