பொலிஸ்மா அதிபர் இன்று இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு…

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று(14) இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நாமல் குமாரவிடம் இருந்து பெறப்பட்டுள்ள குரல் பதிவுகளை ஆராயும் பொருட்டு, பொலிஸ்மா அதிபரின் குரல் பதிவை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று(14) காலை 10 மணியளவில் பொலிஸ்மா அதிபர் இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.