ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பொலிஸ்மா அதிபரினால் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்த தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்றையதினம்(18) தீர்மானமொன்றினை எடுப்பதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படை கட்டளை அதிகாரியை நியமிப்பது தொடர்பில் இதுவரை பொலிஸ் ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே மேலும் தெரிவித்திருந்தார்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம். ஆர் லதீபை பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரியாக நியமிக்குமாறு பொலிஸ் ஆணைக்குழு அண்மையில் பரிந்துரை செய்திருந்தும், இம்மாதம் 09ம் திகதி முதல் குறித்த இந்நியமனம் வழங்கப்பட வேண்டிய போதிலும் இதுவரை பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்படவில்லை.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் பொலிஸ் ஆணைக்குழு விளக்கம் கோரவுள்ளதுடன், பொலிஸ்மா அதிபர் தொடர்பிலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.