பொலிஸ் அதிகரிகளுக்கு இடமாற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், 6 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட சிரேஸ்ட காவல்துறை அதிகாரிகள் 45 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல்துறை ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைய மேற்படி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.