(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர உள்ளிட்ட பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் 102பேர் சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.