பொலிஸ் உயரதிகாரிகள் சிலர் நாளை(12) தெரிவுக் குழு முன்னிலையில்

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக் குழுவு நாளை(12) காலை 10 மணிக்கு மீளவும் கூடவுள்ளது.

அதன்படி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப் பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோரை நாளை(12) தெரிவுக்குழுவுக்கு முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.