(FASTNEWS|COLOMBO) – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் பொலிஸ் உயர் அதிகாரிகள் 13 பேருக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற விசாரணைகளுக்கு தடையாக அமையும் என்ற காரணத்தால் இந்த இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.