பொலிஸ் ஓ.ஐ.சி.யை திட்டிய இளைஞர் நீதிவான் முன்னிலையில்

தனது கைய­டக்க தொலை­பே­சி­யி­லி­ருந்து கெசல்­வத்த பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யுடன் தொடர்பு கொண்டு தகாத வார்த்­தை­களால் திட்டித் தீர்த்த இளைஞர் நீதி­மன்றின் முன்­னி­லையில் தனது தவறை
ஒப்புக் கொண்­ட­தை­ய­டுத்து குறித்த நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் காலில் வீழ்ந்து மன்­னிப்பு கோரு­மாறு கொழும்பு நீதவான் மன்றின் பிர­தம நீதிவான் கிஹான் பில­பிட்­டிய சந்­தேக நப­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

இதற்­க­மைய குறித்த சந்­தேக நப­ரான இளைஞர் கெசல்­வத்த பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஜே.கே.எஸ்.ஜய­னெத்தி முன்­னி­லையில் வந்து அவரின் காலில் விழுந்து மன்­னிப்பு கோரி­யுள்ளார்.

மீண்டும் இது­போன்­ற­தொரு தவறை செய்­யா­தி­ருக்­கு­மாறு நீதி­மன்­றத்­தினால் சந்­தேக நபர் கடு­மை­யாக எச்­ச­ரிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார்.

இவ்­வாறு கடு­மை­யாக எச்­ச­ரிக்­கப்­பட்­டவர் காலியை சேர்ந்த  19 வயதான இளைஞர் ஒருவர் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.