பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மூவருக்கு தேவையின் அவசியம் கருதி உடனடி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதன்படி தலதா மாளிகையின் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.டி.பி ஹலங்கொட பொல்பித்திகம பொலிஸ் நிலையத்திற்கும், புலஸ்திகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஐ.டப்ளியூ பண்டார தலதா மாளிகையின் பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
மல்லாவி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ். ராஜநாயக களனி பொலிஸ் வலயத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
R.Rishma