பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு கூறியதாக தெரிவிக்கப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது..

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை அவரது பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளனரென வெளியாகிய செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ்மா அதிபருக்கு பதவி விலக இரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்ததமையும் குறிப்பிடத்தக்கது.