பூஜித் ஜயசுந்தரவின் மனு ஒத்திவைப்பு (update)

(FASTNEWS|COLOMBO) – தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று(24) ஜயவர்தன, எல்.பி.டி.பி.தெஹிதெனிய மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

—————————————————-(UPDATE)

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் முன்னிலை

(FASTNEWS|COLOMBO) – தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட் வழக்கு விசாரணைக்காக அவர் தற்போது உயர் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார்.