பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வைத்தியசாலையில் அனுமதி

(FASTNEWS|COLOMBO) – இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சுகயீனமுற்று பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் இன்று(02) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.