பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்தில் தீ…

பம்பலபிடியவில் அமையப் பெற்றுள்ள பொலிஸ் மேலதிக படைத் தலைமையக விளையாட்டு அரங்கின் கீழ் மாடியில் இன்று(18) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீயணைக்கும் பிரிவினால் இரு தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயினை தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

 

#rishma