பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் கல்கிஸை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, கல்கிஸை ஹோட்டலுக்குப் பின்புறத்தில் இடம்பெற்ற கடற்கரை களியாட்ட நிகழ்வொன்றில், போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், 30 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதோடு, இதில் 5 யுவதிகளும் உள்ளடங்குவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து, பெருமளவான போதை மாத்திரைகள், கஞ்சா, சட்டவிரோத சிகரெட்டுகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளர்.
சந்தேகநபர்களை கல்கிஸை நீதவான் நீதிமன்றில் இன்று (20), முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.