போக்குவரத்து அமைச்சருடன் இன்று(06) பிற்பகல் இடம்பெறவுள்ள சந்திப்பின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான இறுதி தீர்மானத்தை அறிவிக்க உள்ளதாக இலங்கை புகையிரத நிலையங்களின் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று(06) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, இலங்கை புகையிரத நிலையங்களின் அதிபர்கள் சங்கம் முன்னர் அறிவித்திருந்தது.
எனினும் இன்று போக்குவரத்து அமைச்சர் தம்முடன் கலந்துரையாடலில் ஈடுபட சந்தர்ப்பம் ஒன்றை வழங்கியுள்ள நிலையில், இந்த சந்திப்பின் பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் இந்திக ருவன் பத்திரனகே தெரிவித்துள்ளார்.