(FASTNEWS | COLOMBO) – போக்குவரத்து குற்றங்கள் 07 இற்கு ஆகக் குறைந்த தண்டப்பணமாக ரூபா.25,000 அறவிடுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்துதல், செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், புகையிரத வீதியினுள் பாதுகாப்பின்றி வாகனத்தை செலுத்துதல், செல்லுபடியாகும் வாகன காப்புறுதி இன்றி வாகனம் செலுத்தல், அதிக வேகத்தில் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாதவர்களை சாரதியாக அமர்த்துதல், இடது பக்கத்தால் முந்திச் செல்லுதல் ஆகிய போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகையை அதிகரிக்கும் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.



