எதிர்வரும் 2017 முதல் வீதி போக்குவரத்து விதிமுறைகள் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று(09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
வீதிகளில் சாரதிகள் தன்னிச்சையாக செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விபத்துக்களில் காயமடைகின்றவர்கள் தொடர்பில் விசேட நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.