போட்டித்தொடரை ஆஸி அணியினர் வெற்றியுடன் ஆரம்பித்தது.

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை, அவுஸ்திரேலிய அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி கேட்டுக் கொண்டமைக்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 80 (118), குசல் மென்டிஸ் 67 (95) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜேம்ஸ் ஃபோக்னர் 4, மிற்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 228 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 46.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 58 (92), ஆரொன் ஃபின்ச் 56 (46), ஜோர்ஜ் பெய்லி 39 (54) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் டில்ருவான் பெரேரா 3, லக்ஷன் சந்தகன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இப்போட்டியின் நாயகனாக, ஜேம்ஸ் ஃபோக்னர் தெரிவானார்.