தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் போது தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா ஆகியோருடன் இடம்பெற்ற மோதல் மற்றும் அவுஸ்திரேலிய அணியுடனான நடுவருக்கு இடையில் ஏற்பட்ட தர்க்கம் குறித்து நிரோஷன் திக்வெல்ல வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய கருத்தில் கூறியதாவது;
அதன்படி, ஆஸிக்கு எதிரான போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பானது பிழையானது எனவும் அந்நேரத்தில் தான் நடந்து கொண்ட விதமும் பிழை என திக்வெல்ல தெரிவிக்கின்றார்.
“குறித்த பிழையினை நான் வீரர் என்ற புரிந்துணர்வில் பொறுப்பேற்கின்றேன்.எனது நடத்தையினால் நான் போட்டித்தடைக்கு உள்ளாகினேன்.அந்நேரம் நான் அதிகளவு மனதளவில் குழம்பிப் போயிருந்தேன்.மிகவும் வேதனையாக இருந்தது. என்றாலும் குறித்த சம்பவத்தினால் கிரிக்கெட்டில் நான் நல்லதொரு பாடத்தினைக் கற்றுக் கொண்டேன் . திரும்பவும் அவ்வாறு தான் நடந்து கொள்ளப் போவதில்லை…”
மேலும், தனக்கு விதிக்கப்பட்ட போட்டித்தடை குறித்தும் தென்னாபிரிக்க வீரருடனான வாய்த்தர்க்கம் குறித்தும் சமூக வலையத்தளங்களில் ஏட்டிக்குப் போட்டியாக விமர்சனங்களும் எழுந்தது குறித்தும் திக்வெல்ல கருத்து வெளியிட்டிருந்தார்.
“நாம் வெற்றி பெறும்போது கூச்சலிடுவதும் தோல்வியடைந்தால் திட்டித்தீர்ப்பதும் உலக வழக்கு.. அதற்கு மாறாக இரண்டு சந்தர்ப்பங்களிலும் எங்களை உற்சாகப்படுத்துமாறு தயாவை கோருகின்றேன்.. சமூக வலையத்தளங்களில் விமர்சனைக்கு உள்ளாகியது எனக்கு கவலையில்லை. என்னுடன் இருக்கும் ரசிகர்கள் என்றும் என்னுடன் இருப்பார்கள்… “ எனவும் தெரிவத்துள்ளார்.