போதியளவு விளக்கம் இல்லாது வழக்குகளை விமர்சிக்க வேண்டாம் – ரணில் விக்கிரமசிங்க…

போதியளவு விளக்கம் இல்லாது, உயர் நீதிமன்றம் மற்றும் ஏனைய நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதில் இருந்து விலகி நிற்குமாறு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கடந்த தினங்களில் ஊடகங்களிலும் வேறு நிகழ்ச்சிகளிலும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த சில கருத்துக்களின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்க குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.