போதைக்கு அடிமையாகியுள்ளவர்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் புனர்வாழ்வு பெற்றுக்கொள்வதற்காக, பொது மன்னிப்புக் காலத்தை அமுல்படுத்தவுள்ளதாக போதை நிவாரண செயலணி தெரிவித்துள்ளது.
இந்தக் காலத்தில் பொதுமன்னிப்பு பெறாத போதைக்கு அடிமையானவர்களை அதன் பின்னர் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆண்டுளவில் போதையற்ற நாடாக இலங்கையை உருவாக்கும் ஜனாதிபதியின் சிந்தனையின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதைக்கு அடிமையான 20 000 இற்கும் அதிகமானவர்களுக்கு இவ்வருடத்துக்குள் புனர்வாழ்வளிக்க தயாராக உள்ளதாக அந்த செயலணி தெரிவித்துள்ளது.
மேலும், 50 000 பேர் போதைக்கு அடிமையாகியுள்ளதாக பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளதுடன் இவர்களை 2020 ஆண்டுக்குள் புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.