போதைப்பொருள் பாவனையை தடுக்க ஜப்பான் நிவாரண உதவி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு ஜப்பான் அரசாங்கத்தினால் 200 மில்லியன் யென் (சுமார் 340 மில்லியன் ரூபா) இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த ஒப்பந்தத்தில் பொருளாதார மற்றும் கொள்கை மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் யுகியம அகிரா ஆகியோர் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.