போதைப் பொருள் வர்த்தகர்களுடன் எவ்வித தொடர்பையும் பேணவில்லை – ரபேல் மார்கஸ்..

போதைப் பொருள் வர்த்தகர்களுடன் எவ்வித தொடர்புகளையும் பேணவில்லை என மெக்ஸிக்கோ தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர் ரபேல் மார்கஸ் (Rafael Marquez) தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தாம் தொடர்பு பேணுவதாக அமெரிக்கா சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க உள்ளதாக தெரிவித்த அவர், தான் உள்ளிட்ட 21 நபர்களுக்கும் 41 நிறுவனங்களுக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 

(rizmira)