போத்தல்களுக்கு பெற்றோல் இல்லை.. – மோட்டார் சைக்கிள் சங்கம் எதிர்ப்பு..

நாட்டில் நிலவும் பெற்றோல் தட்டுப்பாட்டினால் வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோல் நிரப்புவதற்கான சுற்றறிக்கை ஒன்று பெற்றோலிய வள அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளமைக்கு அமைவாக இன்று(07) போத்தல் மற்றும் நிரப்பு தாங்கிகளுக்கு பெற்றோல் வழங்க மறுப்பதோடு வாகனத்திற்கு மட்டுமே வழங்கப்படுகின்றது.

குறித்த இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கம், பெற்றோலிய வள அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.

பெற்றோல் இல்லாது பாதை வழியே இடைநிறுத்தப்பட்டுள்ள வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவைக்கு போத்தல்களிலேயே பெற்றோல் எடுத்து செல்ல வேண்டிய நிலைக்கு நிரப்பந்திக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சுற்றறிக்கையினால் குறித்த சாரார் பாதிக்கப்படுவதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அத்தியாவசிய தேவையினை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை அடிப்படை மனித உரிமை மீறல் எனவும், மேற்குறித்த நடவடிக்கைக்கும் அவசரமாக தீர்வொன்றினை முன்வைக்குமாறும் குறித்த கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

E-(reeshma)