‘போயிங்’ விமானங்கள் தொடர்பில் சர்ச்சை நிலைமை..

(FASTNEWS | USA) – அமெரிக்காவின் விமானங்கள் தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’ நிறுவனம் தற்போது சர்ச்சை நிலைமைக்கு உள்ளாகியுள்ளது.

அது, அதன் தயாரிப்புக்களான விமானங்கள் சில அண்மைக் காலமாக விபத்துக்களுக்கு உள்ளாகி வருகின்றமையே ஆகும்.

எத்தியோப்பியாவில் நேற்று(10) விபத்துக்குள்ளானதும் ‘போயிங்’ வகையிலான விமானமொன்றே ஆகும். அதில் பயணிகள் 157 பேர் இருந்த நிலையில் அனைவரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்திருந்தன. எத்தியோப்பியா அதிகாரிகள் தெரிவிக்கையில், இதற்கு 06 மாதங்களுக்கு முன்பதாகவும் கொள்வனவு செய்த விமானமொன்றும் இவ்வாறே விபத்துக்குள்ளாகியதாக சுட்டிக்காட்டியிருந்தனர்.

குறுகிய 05 மாத கால இடைவேளையில் ‘போயிங்’ வகையிலான விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியது இது இரண்டாவது தடவையாகும். கடந்த ஒக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் ‘போயிங்’ வகையிலான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 189 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.